88700 22022

  






  1. பதிவு செய்யும் வரனின் குறைந்தபட்ச வயது ஆண் எனில் 21 ஆகவும், பெண் எனில் 18 ஆகவும் இருக்க வேண்டும்.

  2. இலவசப் பதிவு செய்தவர்கள் மற்றவர்களின் தொடர்பு விபரங்களை காண இயலாது. கட்டணப்பதிவு, சிறப்புக்கட்டணப்பதிவு செய்தவர்கள் மட்டுமே மற்றவர்களின் தொடர்பு விபரங்களை காண முடியும். அதற்குண்டான நடைமுறைகளை கட்டணப்பதிவு பக்கத்தில் காணவும். கட்டணம், தொடர்பு எண்ணிக்கை முகப்பு பக்கத்தில் உள்ளபடியானது. அது மாறுதலுக்கு உட்படும்.

  3. பதிவு செய்தவருக்கும் கொங்கு திருமணம்.காம்-மிற்குமான தொடர்புகள் அனைத்தும் E-mail மூலமாகவே நடைபெறும். தொலைபேசி அழைப்புகளும், கடிதத் தொடர்புகளும் நிர்வாகத்தின் விருப்பத்திற்கு உட்பட்டது.

  4. பதிவுக்கு பின் E-mail, Phone Call, கடிதத்தொடர்புகளுக்கு கொங்குதிருமணம்.காம்-மிற்கு அனுமதி உண்டு.

  5. கொங்குதிருமணம்.காம் தளத்தின் logo, புகைப்படம் அனைத்தும் Trademark செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி யாரும் பயன்படுத்தக் கூடாது.

  6. இவ்வலைதளம் Software அடிப்படையில் இயங்குவதால் பதிவுகள், தேடுதல்கள், விதிமுறைகள் தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் தடைகள் அனைவருக்கும் பொதுவானது.

  7. பதிவு செய்துள்ள வரனின் விபரங்களின் உண்மைத் தன்மையை விசாரித்து திருமணம் முடிவு செய்வது பெற்றோர்களின் முழுப் பொறுப்பாகும்.

  8. பதிவுகளில் ஏதேனும் குறையோ, தவறோ இருப்பதாக அறியும் பட்சத்தில் பதிவில் மாற்றம் செய்யவோ, நீக்கவோ கொங்குத்திருமணம்.காம்-ற்கு முழு அதிகாரம் உண்டு.

  9. புதிய பதிவு செய்தவர்களின் பதிவு விபரங்கள் நிர்வாகத்திற்கு கிடைத்த 24 மணி நேரத்திற்குள் தவறுகள் இல்லாத பட்சத்தில் வலைதளத்தில் வெளியிடப்படும்.

  10. திருமணம் உறுதியாகும்பட்சத்திலோ, வேறு காரணங்களுக்காகவோ பதிவு நீக்கப்படவேண்டும் எனில் முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும்.

  11. கட்டணம் செலுத்தியது உறுதி செய்யப்பட்ட பின்பே கட்டணப் பதிவு விதிமுறைகள் நடைமுறைக்கு வரும்.

  12. பதிவு ஒரு வருட காலத்திற்கு மட்டுமே. மீண்டும் தொடரவேண்டும் எனில் புதுப்பிக்கப்படவேண்டும்.

  13. தேடுதல் தளங்களில் பதிவுகள் List ஆகலாம். அதற்கு கொங்குதிருமணம்.காம் பொறுப்பாகாது.

  14. கட்டணப்பதிவு, சிறப்புக்கட்டணப் பதிவு செய்யும்போது உங்களின் ‍தேவைக்கேற்ப வரன்கள் உள்ளனவா என்று உறுதி செய்தபின் பதிவு செய்யவும். பதிவுக்கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித்தரப்படமாட்டாது.

  15. சரியாக விசாரிக்கப்படாமல் முடிவு செய்யப்படும் திருமணத்தால் ஏற்படும் பிரச்சனைகள் நிர்வாகத்தை கட்டுப்படுத்தாது.